Newsworld Finance News 0811 05 1081105092_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்நிய நேரடி முதலீடு 259% உயர்வு!

Advertiesment
அந்நிய நேரடி முதலீடு மொரிஷியஸ் சிங்கப்பூர் நெதர்லாந்து
, புதன், 5 நவம்பர் 2008 (16:04 IST)
புது டெல்லி: உலகில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பணப்புழக்கம், கடன், முதலீடு குறைந்துள்ள சூழ்நிலையில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு 2.56 பில்லியன் டாலர் வந்துள்ளது.

இது சென்ற வருடம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 259 விழுக்காடு அதிகம். (சென்ற செப்டம்பரில் வந்த அந்நிய நேரடி முதலீடு 713 மில்லியன் டாலர்).

இந்த நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மொத்தம் 17.21 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் இதே ஆறு மாதத்துடன் ஒப்பிடுகையில், 137 விழுக்காடு அதிகம்.

(சென்ற வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 7.25 பில்லியன் டாலர்)

இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு பெற்றதில், சேவை துறையில் உள்ள நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன.

இந்த பிரிவு 2.34 பில்லியன் டாலர் பெற்றுள்ளது

இதை தொடர்ந்து சாலைகளை போடும் பிரிவு உட்பட கட்டுமானத் துறை 1.64 பில்லியன் டாலர், வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவு 1.62 பில்லியன் டாலர், கணினி, மென் பொருள் துறை சார்ந்த பிரிவு 1.36 பில்லியன் டாலர் பெற்றுள்ளன.

மொரிஷியசில் இருந்து 5.27 பில்லியன் டாலர், சிங்கப்பூர் 1.72 பில்லியன் டாலர், அமெரிக்கா 1.15 பில்லியன் டாலர், நெதர்லாந்தில் இருந்து 580 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Share this Story:

Follow Webdunia tamil