புது டெல்லி: இந்த ஆண்டு கரிப் பருவத்தில் 285 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த செப்டம்பர் உடன் முடிவடைந்த கரிப் பருவத்தில், விவசாயிகளிடம் இருந்து மத்திய, மாநில அரசுகளின் வாணிப கழகங்கள் 285.02 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது.
இது சென்ற ஆண்டு கரிப் பருவத்துடன் ஒப்பிடுகையில், 13.67 விழுக்காடு அதிகம்
சென்ற வருடம் கரிப் பருவத்தில் 250.75 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த கரிப் பருவத்தில் கொள்முதல் செய்துள்ள 285.02 லட்சம் டன்களில், பஞ்சாப், ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் பாதிக்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, கரிப் பருவத்தில் மாநில வாரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விபரம்.
பஞ்சாப் - 79.07 லட்சம் டன்.
ஆந்திரா - 74.17
உத்தர பிரதேசம்- 28.91
சட்டீஸ்கர் - 27.43
ஒரிசா - 23.49
ஹரியானா - 15.72
மேற்கு வங்கம்- 15.08
தமிழ்நாடு - 9.68
பீகார் - 5.12
கேரளா 1.68
மகாராஷ்டிரா - 1.60
உத்தரகான்ட் - 1.47
மத்திய பிரதேசம்- 0.69
குஜராத் -0.19
ஜார்கன்ட் - 0.19
கர்நாடகா - 0.19
ராஜஸ்தான் - 0.19
சண்டீகர் -0.09
புதுச்சேரி -0.01.