ரிசர்வ் வங்கி, வங்கிகளின் இருப்பு, எஸ்.எல்.ஆர், ரிபோ வட்டி விகிதம் ஆகியவைகளை குறைத்தது. இதனை தொடர்ந்து வங்கிகள் வட்டியை குறைக்க துவங்கியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி சென்ற வாரம், வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது.
இதே போல் இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பாங்க் ஆப் இந்தியா (ஐ.டி.பி.ஐ) வீட்டு கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்தது.
இதனை தொடர்ந்து யூகோ வங்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது. முன்பு 14% ஆக இருந்த வட்டி, 13.50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி ஏற்கனவே அக்டோபர் 21 ஆம் தேதி வீட்டு கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது.
அத்துடன் கல்வி கடன், வீட்டு கடன், சிறு மத்திய தொழில் பிரிவுகளுக்கான கடன் உட்பட மற்ற வகை கடன்களுக்கும் கால் விழுக்காடு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் திங்கள் கிழமை முதல் கணக்கிடப்படும். இது புதிய கடனுக்கும், ஏற்கனவே உள்ள கடனுக்கும் பொருந்தும்.
அடுத்த வாரம் முதல் வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட உள்ளது அதற்கு பிறகு மேலும் கடனுக்கான வட்டியை குறைப்பது பற்றி ஆரோசிக்கப்படும் என்று யூகோ வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.