Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிதம்பரம் வங்கி சேர்மன்களுடன் ஆலோசனை!

சிதம்பரம் வங்கி சேர்மன்களுடன் ஆலோசனை!
, செவ்வாய், 4 நவம்பர் 2008 (14:34 IST)
புது டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் தட்டுப்பாடில்லா பணப்புழக்கம், கடன் கொடுப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.

சிம்பரம் சென்ற ஞாயிற்றுக் கிழமை, பொதுத்துறை வங்கிகளிடம் வட்டி விகிதத்தை குறைக்குமாறு கூறியிருப்பாகவும், உலக பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து வங்கி உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், இந்த நெருக்கடியில் இருந்து மீள, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முக்கிய தொழில் நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பணப்புழக்கம் அதிகரிக்கவும், வட்டி விகிதத்தை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் ஓ.பி.பட், பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.சக்கரபர்த்தி, பாங்க் ஆப் பரோடா சேர்மன் எம்.டி.மல்லையா, கனரா வங்கி சேர்மன் ஏ.சி.மகாஜன், யூகோ வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.கே.கோயல் உட்பட வங்கி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil