Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சாபில் 100 லட்சம் ட‌ன் நெல் கொள்முதல்!

பஞ்சாபில் 100 லட்சம் ட‌ன் நெல் கொள்முதல்!
, சனி, 1 நவம்பர் 2008 (13:10 IST)
சண்டீகர்: பஞ்சாப் மாநிலத்தில் 100 லட்சம் ட‌னநெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது வரை இல்லாத அளவாக, நெல் கொள்முதல் 145 லட்சம் டன்னை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து தினசரி சராசரியாக நான்கு முதல் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்கு முன் 2004-05 ஆம் ஆண்டில் 140 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த வருடம் நெல் விளைச்சல் அதிக அளவு இருப்பதுடன், வியாபாரிகள் கொள்முதல் செய்வது குறைந்துள்ளது அதே நேரத்தில் அரசின் கொள்முதல் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் மொத்த நெல் கொள்முதலில், வியாபாரிகளின் பங்கு 18.3 விழுக்காடாக இருந்தது. இந்த வருடம் 7.4% ஆக குறைந்து விட்டது.

இந்த மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு மின்னணு பரிமாற்றத்தை பயன்படுத்தி உடனுக்குடன் பணம் வழங்கப்படுகிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் இணையம் மூலமாக கொள்முதல் மற்ற விபரங்கள் உடனுக்குடன் கண்காணிக்கப்படுகின்றன.

சென்ற திங்கட் கிழமை வரை, விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்த வகையில், ரூ.7763.31 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரீப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக ரிசர்வ் வங்கி, பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ. 12,623.62 கோடி வரை கடன் பெற அனுமதி அளித்துள்ளது.

இந்த மாநிலத்தில் அரசின் சார்பில் ஆறு அமைப்புக்கள் நெல் கொள்முதல் செய்கின்றன. அத்துடன் வியாபாரிகளும் கொள்முதல் செய்கின்றனர். இந்த திங்கட்கிழமை வரை மொத்தம் 1,00,05,948 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு அமைப்புக்கள் 92, 63,441 டன் (92.6%), வியாபாரிகள் 7,42,507 டன் (7.4%) கொள்முதல் செய்துள்ளனர்.

இந்திய உணவு கழகம் 1, 54,034 டன், மாநில அரசின் அமைப்பான பன்கிரைன் (Pungrain) 26,91,973 டன், வியாபாரிகள் 7,42,507 டன் கொள்முதல் செய்துள்ளனர்.

மத்திய அரசு பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளதே, வியாபாரிகள் கொள்முதல் செய்வது குறைந்ததற்கு முக்கிய காரணம்.

Share this Story:

Follow Webdunia tamil