புது டெல்லி: பணவீக்கம் நான்காவது வாரமாக குறைந்துள்ளது.
மொத்த விலை அட்டவணையை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் அக்டோபர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.68 % ஆக குறைந்துள்ளதாக, இன்று மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு முந்தைய வாரத்தில் 11.07 % இருந்தது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் பணவீக்கம் 3.11 % இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் கோதுமை, துவரம் பருப்பு விலை தலா 2 %, உளுந்தப் பருப்பு விலை 1 % குறைந்துள்ளது.
அதே நேரத்தில் எண்ணெய் கடுகு விலை 1% அதிகரித்துள்ளது.