Publish Date: Fri, 24 Oct 2008 (18:36 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (18:36 IST)
சேலம்: பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் வெல்ல சந்தையில் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்தது.
இங்கு சென்ற வாரம் நடைபெற்ற ஏலத்தில் பெரிய அச்சு வெல்லம் சிப்பம் ரூ.700க்கும், உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.600 என்ற விலையில் விற்பனை ஆனது.
தீபாவளி நெருங்கி வருவதால் அதிக விலை கிடைக்கும் என்று விவசாயிகள் சுமால் 42 ஆயிரம் சிப்பங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து அதிகளவில் வந்திருந்தனர். வெல்லம் விற்பனைக்கு அதிக அளவு விவசாயிகள் கொண்டு வந்தனர். மேலும் மழை தொடர்ந்து பெய்வதால் வெல்லத்தை எடுத்துச் செல்வதில் பிரச்சனை உள்ளது. இதனால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்தது.
புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பெரிய அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.620, உருண்டை வெல்லம் ரூ.600 என்ற விலையில் விற்பனையானது.
வெல்லத்தின் விலை குறைந்துள்ளதால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.