Publish Date: Thu, 23 Oct 2008 (13:51 IST)
Updated Date: Thu, 23 Oct 2008 (13:45 IST)
திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளின் பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
காவிரி பாசன பகுதிகளிலும், மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 20,992 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 77.28 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளின் பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
இதே போல் கல்லணையில் இருந்து காவிரி ஆறு, வென்னாற்றில் பாசனத்திற்காக தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் இன்று கல்லணை கால்வாயில் விநாடிக்கு 2,513 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 2.121 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.