Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவை வரி தாக்கலுக்கு சிறப்பு கவுன்டர்!

சேவை வரி தாக்கலுக்கு சிறப்பு கவுன்டர்!
, வெள்ளி, 17 அக்டோபர் 2008 (18:44 IST)
சென்னை: சேவை வரிக் கணக்கை 25ஆ‌ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வசதியாக சென்னையில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.

சேவை வரி விதிகளுக்கு உட்ப‌ட்ட சேவைகளை வழங்குவோர் மற்றும் சேவை வரி செலுத்துவோர், முதல் அரையாண்டுக்கான சேவை வரிக் கணக்கை 2008 அக்டோபர் 25ஆ‌ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இதையொட்டி, எம்.எச்.யு.காம்ப்ளக்ஸ், 692 அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35 என்ற முகவரியில் செயல்படும் சேவை வரி ஆணையரக அலுவலகத்தின் முதல் தளத்தில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த கவுன்டர்கள் அ‌க்டோப‌ர் 18 (சனி), 19 (ஞாயிறு), 25 (சனி) ஆகிய விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.

எனவே, கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சேவைவரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு சேவை வரித்துறை ஆணையர் ராஜ் கே பர்த்வால் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சேவைவரிக் கணக்கு படிவம் 'என்.டி.3'-யை தாக்கல் செய்யாமல் இருந்தால் நிதிச்சட்ட விதிமுறைகளின்படி அபராதம் அல்லது தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil