Publish Date: Fri, 17 Oct 2008 (10:20 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
2008 செப்டம்பர் மாதத்தில் ரூ.9,621 கோடி சுங்கவரி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலான ரூ.7,975 கோடியைவிட இந்த ஆண்டில் வசூல் 20.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் செப்டம்பர் வரையில் வசூலாகியிருக்கும் சுங்கவரி கடந்த ஆண்டைவிட 18.3 விழுக்காடு உயர்ந்துள்ளது.
செப்டம்பர் வரையில் ரூ.55,923 கோடிக்கு கலால் வரி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.3 விழுக்காடு உயர்வாகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ரூ.3,273 கோடி சேவை வரி வசூலானது. இது 13.1 விழுக்காடு அதிகரித்து இந்த ஆகஸ்ட்டில் ரூ.3,702 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையில் ரூ.18,316 கோடி சேவை வரி வசூலானது. இது இந்த ஆண்டில் ரூ.23,051 கோடியாக அதிகரித்துள்ளது. இது 25.9 விழுக்காடு உயர்வாகும்.