Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.சி.ஐ.சி.ஐ. எதிரான வதந்தி சதிக்கு ஆதாரம் உள்ளது-காமத்!

ஐ.சி.ஐ.சி.ஐ. எதிரான வதந்தி சதிக்கு ஆதாரம் உள்ளது-காமத்!
, திங்கள், 13 அக்டோபர் 2008 (14:24 IST)
மும்பை: எங்கள் வங்கிக்கு நெருக்கடி உண்டாக்க திட்டமிட்டு சதி செய்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே.வி.காமத் கூறினார்.

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை பற்றி கடந்த பத்து நாட்களாக பல ஊகங்கள் வெளிவந்து கொண்டுள்ளன. இதனை நம்ப வேண்டாம் என்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும், ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை 20 விழுக்காடு சரிந்தது.

இது குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே.வி.காமத் கூறுகையில், எங்கள் வங்கியை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிட்ட வகையில் சிலர் செயல்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. இந்த வங்கிக்கு தேவைக்கும் அதிகமான முதலீடு இருப்பதுடன், உலக அளவில் பலமான நிதி நிறுவனமாகும். வங்கியின் நிதி நிலை சிறப்பாக உள்ளது. கடந்த சில வாரங்களில் வைப்பு நிதி அளவு குறையவில்லை. அதே நேரத்தில் கடன் கொடுப்பதும் குறையவில்லை.

நாங்கள் மிக மோசமான காலத்தை கடந்துவிட்டோம். வதந்திகளை பரப்புகின்றவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாங்கள் மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உட்பட மற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், இன்று வங்கியின் நிதி நிலைமை பற்றி எடுத்துக் கூறியுள்ளோம். மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, செபி ஆகியவை எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக உறுதி அளித்துள்ளன. இது எங்களுக்கு அதிக உதவிகரமாக இருக்கிறது.

எங்கள் வங்கிக்கு எவ்வித பணத் தட்டுப்பாடும் இல்லை. எங்கள் வங்கியின் சார்பில் அரசு கடன் பத்திரங்களில் ரூ.90 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம். அயல்நாடுகளில் உள்ள எங்கள் வங்கி கிளைகளில் 250 கோடி டாலர் கையிருப்பில் ரொக்கமாக உள்ளது என்று காமத் கூறினார்.

கடந்த வாரம் தொடர்ந்து குறைந்து வந்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை, இன்று 25 விழுக்காடு அதிகரித்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிதி நிலையை பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நேற்று, வங்கி சார்பாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil