புது டெல்லி: பணவீக்கம் சிறிது குறைந்துள்ளது. மொத்த விலை அட்டவணையை அடிப்படையாக பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.
இது செப்டம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.80 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 11.19 விழுக்காடாக இருந்தது.
பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணம் காய்கறிகள், பழங்களின் விலை 1% குறைந்ததே. நிலக்கடலை விலை 2%, பருப்பு மற்றும் சிறு தானியங்களின் விலை 0.1% குறைந்துள்ளது.
அதே நேரத்தில் பால் விலை 1%, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 5% அதிகரித்துள்ளது.
தொழில் உற்பத்தி துறை பொருட்களில் குழாய் வகைகளின் விலைகள் 2% குறைந்துள்ளன. இரும்பு, உருக்கு, சிமென்ட் விலைகளில் மாற்றம் இல்லை.
பணவீக்கம் பல வாரங்களாக 12 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது. செப்டம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.99% ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.