Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிவு!
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (17:29 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை முன்னேறவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 106.46 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 11,695.24 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 87.07, சுமால் கேப் 110.54, பி.எஸ்.இ. 500- 55.03 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 04.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,606.60 ஆக உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் காலையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.

ஆனால் மாலையில் ரியல் எஸ்டேட் 1.94%, உலோக உற்பத்தி பிரிவு 1.34% , நுகர்வோர் பொருட்கள் 3.96%, தகவல் தொழில் நுட்பம் 3.04%, வங்கி 2.15%, தொழில் நுட்பம் 1.22% குறைந்தது.

மின் உற்பத்தி 0.38%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.30%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.84%, வாகன உற்பத்தி 0.41% அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 787 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,822 பங்குகளின் விலை குறைந்தது, 74 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 24 பங்குகளின் விலை அதிகரித்தது, 26 பங்குகளின் விலை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 17 பங்குகளின் விலை அதிகரித்தது, 32 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ். ஐ.டி. பிரிவில் உள்ள 7 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 6 பங்குகளில் 6 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 17 பங்குகளின் விலை அதிகரித்தது, 32 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil