Publish Date: Fri, 03 Oct 2008 (17:54 IST)
Updated Date: Fri, 03 Oct 2008 (17:54 IST)
நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் காய்கறிகள், பழங்கள், பருத்தி, பட்டு, ஆட்டோமொபைல், சிறு தொழில் உற்பத்திப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், ரப்பர், தேயிலை, காபி முதலிய முக்கிய பொருட்களின் மொத்த இறக்குமதி 11.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ.8,722 கோடியாக இருந்த இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூ.9,696 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் மொத்த இறக்குமதியில் இந்த முக்கிய பொருட்களின் இறக்குமதி முறையே 2.8 மற்றும் 2.3 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
சமையல் எண்ணெய்யை பொருத்தவரை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி மதிப்பு ரூ.3,778 கோடியாகும். நடப்பாண்டில் இது ரூ.3,698 கோடியாக குறைந்துள்ளது. சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெயின் இறக்குமதி 4.7 விழுக்காடும், ரிபைண்ட் எண்ணெயின் இறக்குமதி 19.9 விழுக்காடும் நடப்பாண்டில் குறைந்துள்ளது. சோயாபீன் சுத்திகரிக்கப்படாத எண்ணெயின் இறக்குமதி கணிசமாக குறைந்ததால் சமையல் எண்ணெயின் இறக்குமதியும் சரிந்துள்ளது.