Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவின் தீர்வு போதுமானதல்ல- கமல்நாத்!

Advertiesment
பாரிஸ் அமெரிக்கா கமல்நாத் பிக்கி சிஐஐ
, புதன், 1 அக்டோபர் 2008 (14:59 IST)
பல நாட்டு வங்கிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால், இந்தியா நீண்ட காலம் பாதிப்பு ஏற்படாமல் இருக்காது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண, அந்நாட்டு அரசின் நிதி உதவி திட்டம் போதுமானவை அல்ல என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

பாரிசில் இந்தியா- ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும் உரையாற்றினார்.

இதில் கமல்நாத் பேசும் போது, உலக பொருளாதார முறைக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதில் அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே அதிகளவு பொறுப்பு இருப்பதாக கருத கூடாது. வளரும் நாடுகளுக்கும் பொறுப்பு உண்டு.

இந்தியாவின் பொருளாதார நிலை, குறுகிய கால மற்றும் நடுத்தர கால நோக்கில் பலமாக இருக்கிறது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து இந்தியா, நீண்ட காலத்திற்கு தற்காத்து கொள்ள முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி பிரஞ்சு அதிபர் சர்கோஸி எடுத்து கூறினார். இதை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆமோதித்துள்ளார்.

அமெரிக்காவில் வால்ஸ்டீரிட்டில் (நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை உள்ள பகுதி) ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஐரோப்பாவில் உள்ள வங்கிகளும், கடன் கொடுக்கும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய பொருளாதார முறைகள் ஒரு நாட்டுக்கு மட்டுமே உரியது அல்ல. உலக பொருளாதாரத்தில், இந்தியாவும் ஒரு பொறுப்பான நாடாக அங்கம் வகிக்கிறது. எனவே இந்தியாவும் புதிய பொருளாதார முறைகளை வடிவமைப்பதில் பங்கு கொள்ள விரும்புகிறது. பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிலும் வங்கி, நிதி நிறுவனங்களின் மறு சீரமைப்பில், இந்தியாவும் பங்கு கொள்ள தயாராக உள்ளது என்று கூறினார்.

இந்த கருத்தரங்கை பிரான்ஸ் வர்த்தக சங்கமும், இந்தியாவைச் சேர்ந்த இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி), இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

Share this Story:

Follow Webdunia tamil