Newsworld Finance News 0809 25 1080925064_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாட்டுத்தாவணி அருகே தற்காலிக சந்தை- நிதி ஒதுக்கீடு!

Advertiesment
மாட்டுத்தாவணி மதுரை சென்ட்ரல் மார்க்கெட்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே தற்காலிக சென்ட்ரல் மார்க்கெட் அமைக்க ரூ.5 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீனாட்சி கோயில் அருகே பல ஆண்டுகளாக சென்ட்ரல் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ரூ.56 கோடி செலவில் புதிய சந்தை கட்டப்பட்டு மாற்றப்பட உள்ளது.

இதற்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரை, மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே சென்ட்ரல் மார்க்கெட்டை தற்காலிகமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதை அமைக்க அரசு ரூ.5.7 கோடி ஒதுக்கி அனுமதியளித்துள்ளது.

மீனாட்சி கோயில் அருகில் உள்ள இந்த மார்க்கெட்டை உடனடியாக மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், மாட்டுத்தாவணி அருகே உள்ள விறகு மண்டியில் தாற்காலிமாக இந்த மார்க்கெட் மாற்றப்படவுள்ளது.

இன்னும் ஆறு மாதத்திற்குள் மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share this Story:

Follow Webdunia tamil