அந்நிய நாடுகளில், தொழில்-வர்த்தக நிறுவனங்கள் கடன் வாங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த உள்ளதாக பொருளாதார துறை செயலாளர் அசோக் சாவ்லா தெரித்தார்.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அசோக் சாவ்லா பேசும் போது, உலக அளவில் பொருளாதார நிலைமை, நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மத்திய அரசும், அந்நிய கடன் கண்காணிப்பு அமைப்புகளும் கண்காணித்து வருகின்றன. உள்நாட்டில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்து உள்ளது. தொழில் நிறுவனங்கள், குறிப்பாக அடிப்படை கட்டமைப்பு துறையில் உள்ள நிறுவனங்கள், அந்நிய நாடுகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்க வசதியாக விதிகள் தளர்த்தப்படும் என்று அசோக் சாவ்லா தெரிவித்தார்.