தேசிய பங்குச் சந்தையின் முன்பேர வர்த்தகத்தில் நிஃப்டி (செப்டம்பர்) பிரிமியம் 24.20 புள்ளியில் இருந்து 20.35 புள்ளியாக குறைந்தது. இதில் புதிதாக 5.10 லட்சம் பங்குகள் சேர்ந்தன.
தற்போது இதில் நேற்று மட்டும் ரூ.2,118 கோடி மதிப்புள்ள பங்குகள் சேர்ந்துள்ளன. ஓபன் இன்ரஸ்டில் மொத்தம் ரூ.79,387 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளன.
ஓபன் இன்ரஸ்ட் வர்த்தகத்தில் கால் ஆப்சனில் 17.10 லட்சம் பங்குகள் இணைந்துள்ளன. இதே போல் புட் ஆப்சனில் 10.10 லட்சம் பங்குகள் இணைந்துள்ளன.
ஓபன் இன்ரஸ்டில் அதிக அளவு மதிப்பு உயர்ந்த பங்குகள் ரிலையன்ஸ் பவர் (47%), ஸ்டர்லைட் இண்டஸ்டிரிஸ் (26%), ஐ.எப்.சி.ஐ (35%), நெய்வேலி லிக்னைட் (16%), இன்போசியஸ் டெக்னாலஜிஸ் (10%).
ஓபன் இன்ரஸ்டில் அதிக அளவு மதிப்பு குறைந்த பங்குகள் அன்ஸால் புராபரிட்டிஸ் அண்ட் இன்ப்ராக்சர் (7%), ஹெச்.பி.சி.எல் (5%), ஐ.டி.பி.ஐ (4%), டாடா மோட்டார்ஸ் (4%).