Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரக்கு கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் சாதனை!

சரக்கு கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் சாதனை!
, புதன், 17 செப்டம்பர் 2008 (11:59 IST)
தூத்துக்குடி துறைமுகம் 100 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் 1.4.2008 முதல் 13.9.2008 வரை 100 லட்சம் (10 மில்லியன்) டன் சரக்குகள் ஏற்றி, இறக்கப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 89.95 லட்சம் டன் சரக்கு கையாண்டது. இதனுடன் ஒப்பிடும் போது 12.08 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

மத்திய அரசு 2008-09 ஆம் ஆண்டிற்கு 240.60 லட்சம் சரக்கு கையாள வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கையும் கடந்து அதிக அளவு சரக்குகள் கையாள முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

தூத்துக்குடி துறைமும் சாதனை அளவை எட்டியுள்ளதற்கு முக்கிய காரணம் ஆழ்த் துறைமுகத்தில் கையாளப்பட்ட நிலக்கரியாலும், அதிகளவில் கையாளப்பட்ட சரக்குகளான தாமிரத் தாது, உரம் மற்றும் உரத்தின் கச்சா பொருள்களாலும், சரக்குப் பெட்டகங்கள் மூலம் கையாளப்பட்ட சரக்குகளாலும் நிகழ்ந்துள்ளது.

இந்த சாதனை துறைமுக வாடிக்கையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுக சரக்கு கையாளும் குழுமத்தின் அதிகாரிகள், தொழிலாளர்களின் கூட்டு முயற்சியால் நிகழ்ந்துள்ளது.

இந்த சாதனை புரிவதற்கு காரணமாக இருந்த ஒவ்வொருவரையும், தூத்துக்குடி துறைமுகம் பாராட்டுகிறது.

மேலும், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை கடப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து உதவி புரிய வேண்டும் துறைமுக சபைத் தலைவர் கு.ஜெ. ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil