Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யமாஹா புதிய பைக் அறிமுகம்!

Advertiesment
யமாஹா புதிய பைக் அறிமுகம்!
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (15:11 IST)
மோட்டார் பைக்குகளை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான, யமாஹா மோட்டார் இந்தியா நிறுவனம், மாட்சோ ஸ்டீரிட் பைட்டர் யமாஹா எப்.இஜட் 16 ரக மோட்டார் (Macho Street Fighter Yamaha FZ 16) பைக்குகளை அறிமும் செய்துள்ளது. இதன் விலை ரூ.65 ஆயிரம்.

இந்த புதிய மோட்டார் பைக் ஞாயிற்றுக் கிழமை கோவாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படும்.

இதன் அறிமுக விழாவில் யமாஹா நிறுவனத்தின் தலைமை செய்ல் அதிகாரியும், மேலான்மை இயக்குநருமான டசுமு மபூசி (Tsutomu Mabuchi) பேசுகையில், இந்த உயர்ரக மோட்டார் பைக், சந்தேகமில்லாமல் இளைஞர்களை கவர கூடியதாக இருக்கும் என்று கூறினார்.

இந்த புதிய மோட்டர் பைக் 153 சி.சி திறன் கொண்டது. இது லாவா ரெட், மிட்நைட் பிளாக், பிளேமிங் ஆரஞ்ச் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.


Share this Story:

Follow Webdunia tamil