Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கூர் பிரச்சனை- அந்நிய முதலீட்டிற்கு பாதிப்பில்லை!

Advertiesment
சிங்கூர் பிரச்சனை- அந்நிய முதலீட்டிற்கு பாதிப்பில்லை!
, புதன், 10 செப்டம்பர் 2008 (15:30 IST)
சிங்கூர் போன்ற பிரச்சனையால் அந்நிய முதலீட்டிற்கு பாதிப்பில்லை என்று உருக்கு தொழில் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் லட்சுமி மிட்டல் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்சனைகளால், மேற்கு வங்கத்தில் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும். அத்துடன் அந்நிய நாடுகளில் முதலீடு செய்ய இந்தியா சிறந்த இடம் என்று உள்ள நல்லெண்ணம் சிதைந்துவிடும் என்று தொழில் துறை வட்டாரங்கள் கூறிவருகின்றன.

இந்நிலையில் இந்த மாதிரியான பிரச்சனைகளால், அந்நிய முதலீடு பாதிக்க வாய்ப்பு இல்லை என்று லட்சுமி மிட்டல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் லட்சுமி மிட்டல் பேசும் போது, உலக நாடுகள், சிங்கூர் போன்ற ஒரு பிரச்சனையை உதாரணமாக எடுத்துக் கொள்ளாது. இந்த பிரச்சனையால் மற்ற நாடுகளில் உள்ள முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

இவரின் நிறுவனமான ஆர்சிலர் மிட்டல், இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதை பற்றி கூறுகையில், ஒரிசாவிலும், ஜார்கன்ட் மாநிலத்திலும் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி உட்பட பல்வேறு அனுமதி வழங்குவதற்கு தாமதமாகிறது.

இதனால் இதன் முதலீட்டு செலவுகள் 50 விழுக்காடு அதிகரிக்கின்றன. இந்த திட்டத்தின் மொத்த முதலீடு 30 பில்லியன் டாலராக அதிகரித்து விட்டன. இதுவரை ஒரிசா, ஜார்கன்ட் மாநில அரசுகளிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.

மேலும் இந்த மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை விரைவாக செய்து முடிப்பதை பொறுத்தே, இவை விரைவாக நிறைவேற்றுவது அமையும்.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இருந்தாலும், உருக்கு தேவை குறையவில்லை என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil