அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசியை ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை விதித்தது.
இப்போது சன்னரக அரிசியான “புஷா 1121” ரக அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இது தொடர்பாக அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது.
விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் [Agricultural and Processed Food Product Export Development Authority (APEDA)] பதிவு செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே புஷா 1121 ரக அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அரிசி கன்டலா, காகிநாடா, கொல்கத்தா, மும்பை, முந்தரா, பாப்புவாவ் ஆகிய துறைமுகங்களில் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். இதன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை 1 டன் ரூ.48 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரிப் பருவத்தில் கொள்முதல் முடிந்த பிறகே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு பாஷா ரக அரிசியை ஏற்றுமதி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.