இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.9 விழுக்காட்டிற்குக் குறைந்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை பொருளாதார வளர்ச்சி 7.9 விழுக்காடாக உள்ளது. சென்ற வருடம் இதே மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடாக இருந்தது.
இந்த ஆண்டு வளர்ச்சி குறைந்ததற்கு காரணம் வங்கிகள் வட்டியை அதிகரித்ததால். தொழில் துறை உட்பட சில துறைகளின் உற்பத்தி குறைந்ததே.
பணவீக்கம் 12 விழுக்காட்டிற்கும் அதிகமானது. இதனால் ரிசர்வ் வங்கி சில கடுமையான நடவடிக்கையை எடுத்தது. வட்டி விகிதத்தை அதிகரித்தது. வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் உயர்த்தியது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பல்வேறு துறையினரும் கருத்து தெரிவித்தனர்.
எதிர்பார்த்தபடியே, உற்பத்தி துறையின் வளர்ச்சி 5.6% ஆக குறைந்துள்ளது (சென்ற வருடம் 10.9%) விவசாய துறை உற்பத்தியும் மூன்று விழுக்காடாக குறைந்துள்ளது. (சென்ற வருடம் 4.4%).
இதே போல் மின் உற்பத்தி, எரிவாயு போன்றவைகளின் வளர்ச்சி 2.6% ஆக உள்ளது (சென்ற வருடம் 7.9%), மற்ற துறைகளின் வளர்ச்சியும் குறைந்துள்ளது.