Publish Date: Wed, 27 Aug 2008 (18:53 IST)
Updated Date: Wed, 27 Aug 2008 (18:53 IST)
புதுடெல்லி: இம்மாதம் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான 10 நாட்களில் ரயில்வேத் துறை ரூ.1,919.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (ரூ.1,707.43 கோடி) ஒப்பிடுகையில் இது 12.43 விழுக்காடு கூடுதலாகும்.
சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு இம்மாதம் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான நாட்களில் ரூ.1,275.38 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இத்தொகை ரூ.1,169.03 கோடி மட்டுமே. இது 9.10 விழுக்காடு கூடுதலாகும்.
ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக இந்த மாதத்தில் ரூ.584.77 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 19.96 விழுக்காடு அதிகமாகும். இம்மாதத்தில் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சுமார் 19 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 9.86 விழுக்காடு கூடுதலாகும்.
Webdunia
Publish Date: Wed, 27 Aug 2008 (18:53 IST)
Updated Date: Wed, 27 Aug 2008 (18:53 IST)