Publish Date: Mon, 25 Aug 2008 (17:26 IST)
Updated Date: Mon, 25 Aug 2008 (17:26 IST)
பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க உரிமையாளர்க்ள சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடுகளை சரி செய்வது குறித்து சேலத்தில் தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் வார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டம் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 25 Aug 2008 (17:26 IST)
Updated Date: Mon, 25 Aug 2008 (17:26 IST)