Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணவீக்கம் குறையும்: ஜி.கே.பிள்ளை!

பணவீக்கம் குறையும்: ஜி.கே.பிள்ளை!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (15:58 IST)
பணவீக்கம் குறையும் என்று மத்திய வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விபரப்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மும்பையில் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட ஜி.கே. பிள்ளை, செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சரவை குழு விலைவாசியை அவ்வப்போது உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. விலை உயராமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரிசி தேவையான அளவு கிடைக்கிறது. மற்ற பருப்பு, தானியங்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. மத்திய அரசு மானிய விலையில் சமையல் எண்ணெயை விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதனால் பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்பில் நடந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றி கூறுகையில், இந்த அமைப்பின் தலைவர் பாஸ்கல் லாமி, தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவரின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் கருத்து தெரிந்த பிறகு, இந்தியா பேச்சுவார்த்தையை துவக்குவதில் ஆர்வம் காண்பிக்கும் என்று கூறினார்.

ஜெனிவாவில் நடந்த 30 நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இதை மீண்டும் துவக்குவதற்கு ஆலோசிக்க உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பாஸ்கல் லாமி கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்த பேச்சு வார்த்தை குறிப்பாக அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் முறிந்தது.

இந்தியா போன்ற வளரும் நாடுகள், விவாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் உணவுப் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துதல், கூடுதல் வரி விதித்தல் போன்ற விஷயங்களால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களின் அளவு 40 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்தால் மட்டும் (உள்நாட்டு மொத்த உற்பத்தி அளவில்) கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கூறிவருகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் 10 விழுக்காடுக்கு மேல் அதிகரித்தால், கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமை வேண்டும் என்று கூறி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil