Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடகை மீது சேவை வரி - மத்திய அரசு பதில் மனு!

வாடகை மீது சேவை வரி - மத்திய அரசு பதில் மனு!
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:09 IST)
வர்த்தக ரீதியாக வாடகைக்கு விட்டுள்ள கட்டிடங்களின் வாடகை வருவாய் மீது சேவை வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று அறிவிக்கும்படி, உச்ச நீதி மன்றத்திடம் மத்திய அரசு முறையிட்டுள்ளது

மத்திய அரசு பட்ஜெட்டில் வர்த்தக ரீதியாக வாடகைக்கு விட்டுள்ள கட்டிடங்கள், திரை அரங்கு, சூப்பர் மார்க்கெட், அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பெறும் வாடகை மீது சேவை வரி விதிப்பதாக அறிவித்தது. இதற்காக 2007ஆம் ஆண்டு நிதி சட்டத்தில் திருத்தம் செய்தது.

இதை எதிர்த்து சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மல்டிபிளக்ஸ் எனப்படும் திரை அரங்கு, சூப்பர் மார்க்கெட், உணவு விடுதி போன்றவைகளை அடங்கிய கட்டிட உரிமையாளர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவை மும்பை, சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, கேரள உயர்நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அசையா சொத்துக்களான கட்டிடங்களை வர்த்தக ரீதியான பயன் பாட்டிற்கு வாடகைக்கு விடுதல், குத்தகைக்கு விடுதல் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மீது சேவை வரி விதிக்க முடியாது.

2007ஆம் ஆண்டு நிதி சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, இந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. சேவை வரி விதிக்கும் சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பல்வேறு உயர் நீதி மன்றங்களில் தொடர்ந்துள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றும் படி மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி பி.என். அகர்வால் தலைமையிலான அமர்வு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். எல்லா வழக்குகளையும் உச்ச நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும்.

அரசியல் சாசனப்படி, மத்திய அரசுக்கு வாடகை வருமானத்தின் மீது சேவை வரி விதிக்க அதிகாரம் உண்டு என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியது.

இந்த மனு மீது பதில் அளிக்கும் படி, நீதிபதி பி.என். அகர்வால், இந்திய சில்லரை வர்த்தக நிறுவனங்களின் சங்கம், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய மல்டிபிளக்ஸ் அசோசிசன், ஆகியவைளுக்கு பதில் அனுப்ப தாக்கீது அனுப்பும் படி உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil