Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெகா வளையல் அறிமுகம்!

Advertiesment
மெகா அளவு வளையல் டாடா தங்க‌ம்
, திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (11:56 IST)
உலகத்திலேயே 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட மெகா அளவு வளையல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மெகா வளையலை, டாடா குழுமத்தைச் சேர்ந்த டைடன் இன்டஸ்டிரிசின் “கோல்ட் ப்ளஸ” பிரிவு தயாரித்துள்ளது.

இதை சமீபத்தில் செய்தியாளர்களிடம் காண்பித்த கோல்ட் ப்ளஸ் துணை தலைவர் எல்.ஆர்.நடராஜன் கூறும் போது, இந்த மெகா சைஸ் வளையலின் விட்டம் 1,830 மில்லி மீட்டர் (சுமார் 72 அங்குலம்-6 அடி), 140 மில்லி மீட்டர் (சுமார் 5.5 அங்குலம்) அகலம், 24,505 கிராம் எடை (சுமார் 3,064 சவரன்) கொண்டது.

இதை 30 தங்க நகை ஆசாரிகள் எட்டு நாட்கள் கடுமையாக உழைத்து தயாரித்துள்ளனர். இது எல்லா கோல்ட் ப்ளஸ் கிளைகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil