Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையல் எண்ணெய் இறக்குமதி உயர்வு!

சமையல் எண்ணெய் இறக்குமதி உயர்வு!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:23 IST)
அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அதிகரித்துள்ளது!

இந்த எண்ணெய் ஆண்டில் முதல் ஒன்பது மாதஙகளில் (எண்ணெய் ஆண்டு நவம்பர் முதல் அக்டோபர் வரை) 3,629,012 டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தைவிட 10 விழுக்காடு அதிகம். ( சென்ற வருடம் 3,297,769 டன்).

இதே போல் சமையலுக்கு அல்லாத மற்ற வகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய்கள் 5,09,506 டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 5.5% அதிகம். ( சென்ற வருடம் 4,82,873 டன்).

இதே போல் அரசு பொது விநியோக திட்டத்திற்காக இறக்குமதி செய்யும் பாமாயிலின் அளவும் அதிகரித்துள்ளது. அரசு ஜூலை மாதம் மட்டும் 77,973 டன் பாமாயில் இறக்குமதி செய்துள்ளது.

இந்த எண்ணெய் ஆண்டில் ஒன்பது மாதங்களில் மொத்தம் 2,83,172 டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil