இந்தியாவில் இருந்து எகிப்துக்கு 200 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளை தேயிலை வாரியம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் இருந்து எகிப்து நாட்டிற்கு முன்பு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக எகிப்துக்கு தேயிலை ஏற்றுமதி செய்வது சில காரணங்களினால் தடை ஏற்பட்டது. இதற்கு முன்பு தென் இந்தியாவில் உற்பத்தியாகும் சி.டி.சி. ரக தேயிலை எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் இருபது லட்சம் கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதனை அடுத்த சில வருடங்களில் 200 லட்சம் கிலோவாக அதிகரிக்கும் முயற்சியில் தேயிலை வாரியம், தென் இந்திய ஐக்கிய தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் (உபாசி) ஈடுபட்டுள்ளன.
இதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் இந்திய தேயிலை மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளன.
இது குறித்து உபாசி பொதுச் செயலாளர உலாஷ் மேனன் கூறுகையில், உபாசி பிரதிநிதிகள் சமீபத்தில் கெய்ரோவிற்கு சென்றனர். அங்கு அரசு நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ள முறையில் இருந்தது. இந்த ஆண்டு இறுதிக்குகள் கெய்ரோவில் இந்திய தேயிலை மையம் செயல்பட துவங்கும் என்று தெரிவித்தார்.