Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் சாதன உற்பத்திக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்!

Advertiesment
மின் சாதன உற்பத்திக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்!
, புதன், 13 ஆகஸ்ட் 2008 (16:15 IST)
மின்சார சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை மின் சாதன வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் இம்மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை “எலக்ட்ரிகா 2008” (Electrica 2008) என்ற மின் சாதன வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து இந்த சங்கத்தின் தலைவர் ஹீகி சந்த் டி.ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மின்சார சாதனங்களை உற்பத்தி செய்ய சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படவேண்டும்.

இந்தியாவில் அதிக அளவு மின்சார பல்புகள் உட்பட மின் சாதனங்களை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

ஆனால் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களில் 10 விழுக்காடு மட்டமே இங்கு தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறது.

வருடத்திற்கு மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின் சாதனங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இவற்றை தமிழகத்திலேயே உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைப்பதற்கு மாநில அரசு ஒரே இடத்தில் அனுமதி வழங்க வேண்டும். வரி விலக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தராஞ்சல், ஹிமாசல பிரதேச மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளன.

சென்னை நகரின் நெருக்கடியை தீர்க்கும் வகையில், மின்சாதன மொத்த வர்த்தகர்கள் கடைகளை அமைக்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு குடியிருப்புக்கள் கட்ட நகருக்கு வெளியே நிலம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்நாட்டு மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். சீனாவில் இருந்து மின்சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை தரம் குறைந்து இருப்பதுடன், விலையும் மலிவாக இருக்கிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்கும் வகையில் சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil