பொருளாதார வளர்ச்சி 7.7 விழுக்காடாக குறையும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு கூறியுள்ளது.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரெங்கராஜன் தலைமையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு இயங்கி வருகிறது.
இந்தக் குழு 2008-09 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 8.5 விழுக்காடாக இருக்கும் முன்பு மதிப்பிட்டு இருந்தது. ஆனால் இப்போது இந்த மதிப்பீட்டை குறைத்துள்ளது.
இன்று பிரதமரிடம் பொருளாதார நிலை பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
இதற்குப் பின் குழுவின் தலைவர் சி.ரெங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.7 விழுக்காடாக இருக்கும்.
சென்ற வருடம் இருந்த அளவான 9 விழுக்காடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் பொருளாதார ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அடுத்த மார்ச் மாதத்திற்குள் பணவீக்கத்தை 8 முதல் 9 விழுக்காடாக குறைக்க வேண்டும்.
உலக சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்ததே, பணவீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்காததை விட, புதிய திட்டங்களினால் அரசுக்கு பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 5 விழுக்காடாக இருக்கும் என்ற மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு வரும் வருவாய் குறையாவிட்டாலும் கூட, இந்த வருடம் பட்ஜெட்டில் எதிர்பார்த்ததை விட நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்று ரெங்கராஜன் கூறினார்.
இவர் கடந்த வாரம் பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பதவியை ராஜினமா செய்தார்.
மத்திய அரசு பட்ஜெட் சமர்பிக்கும் போது, எதிர்பார்க்கும் வரவு-திட்டமிட்டுள்ள செலவுகளை அறிவிக்கிறது. மொத்த வருவாயை விட, செலவு அதிகரிக்கும் நிலையில் ஏற்படும் இடைவெளி பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் போது. விவசாயிகள் கடன் தள்ளுபடி ரூ.70 ஆயிரம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இது போன்ற பட்ஜெட்டில் இல்லாத புதிய பொருளாதார சுமைகளால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை எதிர்பார்த்த அளவை விட அதிகரிக்கும் என்று இந்த குழு எச்சரித்துள்ளது.