Newsworld Finance News 0808 11 1080811058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏற்றுமதியாளர் கடனுக்கு காப்பீடு!

Advertiesment
ஏற்றுமதியாளர் கட‌ன் காப்பீடு
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (17:59 IST)
ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு வங்கி, நிதி நிறுவனங்களில் வாங்கும் கடனுக்கு காப்பீடு வசதியை இந்திய ஏற்றுமதி கடன் பொறுப்பு நிறுவனம் வழங்க உள்ளது.

தற்போது இந்திய ஏற்றுமதி கடன் பொறுப்பு நிறுவனம் (Export Credit Guarantee Corporation of India - ECGC) ஏற்றுமதியாளர்கள் சரக்கு அனுப்பியதற்கு பிறகு வாங்கும் கடனுக்கு (ஃப்ரி-சிப்மென்ட்) பொறுப்புகளை ஏற்கிறது. இதன்படி அந்நிய நாட்டு இறக்குமதியாளர்கள் சரக்குக்கான தொகை கொடுக்காவிட்டால், இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் ஏற்றுமதி ஆவணங்களை காட்டி, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாது. இதுவரை இந்த நிறுவனம் ஃப்ரி-சிப்மென்ட் கடனுக்கான பொறுப்புகளை மட்டும் ஏற்று வந்தது.

இனி ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் தொடர்பாக வாங்கும் மற்ற கடனுக்கும் காப்பீடு செய்து, இதற்கான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள போகிறது.

இது குறித்து இதன் மேலாண்மை இயக்குநர் ஏ.வி.முரளிதரன் கூறுகையில், ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு வங்கி, நிதி நிறுவனங்களின் வாங்கும் கடனுக்கும் காப்பீடு செய்ய போகிறோம். இதன் மூலம் அந்த கடனுக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம். இதற்கான அனுமதிக்கு காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (இர்டா) விண்ணப்பித்துள்ளோம். இந்த அனுமதி கூடிய விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இத்துடன் ஜூலை 1ஆம் தேதி கப்பலில் அனுப்பும் சரக்குகளுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை (மரைன் இன்ஷ்யூரன்ஸ்) துவக்கியுள்ளோம். இதற்கு ஏற்றுமதியாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த ஆண்டு குறைந்த அளவு ஏற்றுமதி செய்வர்களுக்கும் புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று கூறினார்.

இந்த நிறுவனம் சென்ற நிதியாண்டிற்கான இலாப ஈவு தொகையாக ரூ.162 கோடி மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் ரூ.4,37,882 கோடி மதிப்புள்ள சரக்குக்கு காப்பீடு செய்துள்ளது. இதன் மூலம் இதற்கு ரூ.668.36 கோடி காப்பீடு கட்டணமாக கிடைத்துள்ளது. இதன் நிகர லாபம் ரூ.479.43 கோடியாக உள்ளது. மத்திய அரசு சென்ற வருடம் மூலதனத்திற்காக ரூ.100 கோடி வழங்கியது. இதன் மூலதனம் ரூ.900 கோடியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil