Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிச் சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் சர்க்கரை விடுவிப்பு!

வெளிச் சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் சர்க்கரை விடுவிப்பு!
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:29 IST)
சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மத்திய அரசு 5 லட்சம் டன் சர்க்கரையை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது.

மத்திய அரசு சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரையை பொது விநியோக திட்டத்திற்கு ஒதுக்கியது போக, வெளிச் சந்தையில் குறிப்பிட்ட அளவு விற்பனை அனுமதி வழங்கி வருகிறது. சர்க்கரையை அரசு, கூட்டுறவு, தனியார் ஆலைகள் உற்பத்தி செய்தாலும், இதன் விற்பனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக வெளிச் சந்தையில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் வெளிச் சந்தையில் விற்பனை செய்ய சர்க்கரை விற்பனை செய்யும் அளவுகள் அவ்வப்போது மத்திய அரசு மாற்றும்.

இதன்படி ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் வெளிச் சந்தையில் விற்பனை செய்ய ஐந்து லட்சம் டன் சர்க்கரையை விடுவித்துள்ளது.

இது குறித்து மத்திய விவசாய அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பொது விநியோக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் (சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில்) அதிக அளவு சர்க்கரை உற்பத்தி விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சூழ்நிலையிலும் கடந்த சில நாட்களாக வெளிச் சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 20 லட்சம் டன் சர்க்கரை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவை செப்டம்பர 30ஆம் தேதிக்குள் விற்பனை செய்வதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால், மேலும் கூடுதல் சர்க்கரையை வெள்ச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் வெளிச்சந்தை விற்பனைக்கு ஏற்கனவே 48 லட்சம் டன் சர்க்கரையை விடுவித்துள்ளது (சென்ற வருடம் 36 லட்சம் டன்). இந்த வருடம் கூடுதல் சர்க்கரை விற்பனைக்கு விடுவித்து இருந்தாலும், இதன் விலை குறையிவில்லை.

சர்க்கரை விலை கடந்த சில மாதங்களில் டன்னுக்கு ரூ.500 அதிகரித்து விட்டது. இனி வரும் மாதங்கள் பண்டிகை காலம். இதனால் விலை மேலும் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

இந்த சர்க்கரை ஆண்டில் 220 லட்சம் டன் (2008 செப்டம்பர் முதல் 2009 ஆகஸ்டு வரை) சர்க்கரை உற்பத்தியாகும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. பருவ நிலை சாகமாக இருந்தால் மேலும் 5 முதல் 7 விழுக்காடு அதிகரிக்க கூடும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இந்த செப்டம்பர் மாதம் இறுதியில் 110 டன் சர்க்கரை இருப்பில் இருக்கும். அடுத்த வருடம் 220 டன் உற்பத்தியாகும். மொத்தம் 330 டன் சர்க்கரை கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil