பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக சுரேஷ் டி.டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆலோசனை குழுவின் தலைவராக இருந்த பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி.ரெங்கராஜன் ராஜூனமா செய்ததை தொடர்ந்து, இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த குழுவின் உறுப்பினராக சுரேஷ் டி.டெண்டுல்கர் உள்ளார்.
இந்த நியமனத்தை சுரேஷ் டி.டெண்டுல்கர் உறுதிப்படுத்தியதுடன், அடுத்த வாரம் தலைவர் பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தலைவர் பதவியில் இருந்து ரெங்கராஜன் விலகியுள்ளதால், அடுத்த வாரம் சமர்பிக்க இருக்கும் 2008-09 நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின் பணிகள் பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.