மும்பை பங்குச் சந்தையின் மேலாண்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரஜினிகாந்த் பட்டேல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அவரின் சொந்த காரணங்களுக்காக ரஜினிகாந்த் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது தலைமை செயல் அதிகாரியாக உள்ள மகேஷ் எல்.சோனிஜி, கூடுதலாக நிர்வாக பொறுப்புகளையும் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.