Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொருளாதார வளர்ச்சி 8% - ரெங்கராஜன்!

பொருளாதார வளர்ச்சி 8% - ரெங்கராஜன்!
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (17:35 IST)
இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடு வரை இருக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு பணவீக்கம் குறையும் எ‌ன்றசி.ரெங்கராஜன் கூறினார்.

புதுடெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகை தந்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவருமான சி. ரெங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதே நேரத்தில் அடுத்த நிதி ஆண்டில் அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு பணவீக்கம் 8 முதல் 9 விழுக்காடாக குறையும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டிலும் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

பல்வேறு பொருட்களின் விலை குறையும் வரை ரிசர்வ் வங்கி எடுத்துள்ள பொருளாதார கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார்.

மத்திய அரசு பட்ஜெட்டின் போது அறிவித்த நிதி பற்றாக்குறை அளவு பற்றி கேட்டதற்கு, இந்த நிதி ஆண்டில் பட்ஜெட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.5 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு எட்டப்படும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளில் நிதி பற்றாக்குறை அதிகரிக்கவில்லை. பட்ஜெட்டில் இல்லாத இனங்களில் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்கள் வழங்கியது, விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்தல் போன்றவைகளால் மத்திய அரசுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத செலவினங்கள் உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை வகுக்கும் குழுவின் முக்கிய அங்கத்தினரான திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 விழுக்காடு என்ற அளவில் இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதே போல் ரிசர்வ் வங்கி ஜூலை கடைசி வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தது. இந்த அளவைவிட குறையும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil