இந்தியாவின் 9 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் சாலையோர உதவி திட்டம் தற்போது கோவை உட்பட 13 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவக்கப்பட்ட இந்த சாலையோர உதவிச் சேவை (ஸிஷிகி)ஃபோர்டு இந்தியா தனது வாடிக்கையாளருக்கு நகருக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் தொந்தரவில்லாத காரோட்டும் அனுபவத்தை வழங்குவதற்காக துவக்கப்பட்ட திட்டமாகும்.
சாலையில் பழுது ஏற்பட்டு நிற்கும் வாகனத்தை பழுதுபார்க்க உதவும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது.
24 மணிநேர ஃபோர்டு சேவையான ஸிஷிகி சம்பவ இடத்திலயே சிறு பழுது பார்ப்புகளுக்கான எந்திரம் சார்ந்த சேவைகள்; தேவைப்பட்டால் சேவை மையத்திற்குக் காரைக் கொண்டு செல்வது; எரிபொருள் வழங்கல்; மின்கலங்களின் ஜம்ப்ஸ்டார்ட்; கார்களைத் திறக்கும் உதவி; இழுத்துச் செல்லும் உதவி போன்ற பல உதவிச் சேவைகளை வழங்குவதற்கான ஒரு தேசிய கட்டணமில்லாத சேவையாகும். இதற்கு தொலைபேசி வாயிலாக அழைத்தால் மட்டும் போதும்.
2007ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டம் முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரூ, புனேயிலும், 2ம் கட்டமாக ஹைதராபாத், கொச்சி, லூதியானா, சண்டிகர் ஆகிய 9 ஊர்களில் செயல்பட்டு வருகிறது. 3ம் கட்டமாக கோவை உட்பட, ஜெய்ப்பூர், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஃபோர்டு சேவை சாலையோர உதவித் திட்டம் பழுதான வாகனங்களைக் கொண்டு செல்லும் டிரக்குகளும், பழுதான வாகனத்தின் உரிமையாளர்களுக்கு மாற்று வாகனமாக மோட்டார் சைக்கிள் அளிப்பது அல்லது மாற்று வாகனம் ஏற்பாடு செய்து தருவது என இரண்டு வகையான பிரிவைக் கொண்டுள்ளது.
ஃபோர்டின் இந்த சேவை, வாடிக்கையாளர்கள் நிம்மதியாக வாகனம் ஓட்டுவதற்கு வழி வகுக்கும் வகையில் உள்ளது.