ஆப்பிரிக்க நாடுகளுக்கு மக்காச் சோளம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மக்காச் சோளத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், சென்ற ஜூலை மாதம் 3 ஆம் தேதி அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த தடையில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மக்காச் சோளம் ஏற்றுமதி செய்வதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவெடுத்துள்ளது
மனிதாபிமான முறையில் கென்யா, சோமாலியா, புரூண்டி போன்ற அதிக அளவு உணவு தானிய தட்டுபாடு நிலவும் நாடுகளுக்கு 25,000 டன் ஏற்றுமதி செய்யப்படும்.
இவை ஐக்கிய நாடுகளின் சபையின் மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்நிய நாடுதளின் வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது
ஐ.நா உணவு திட்டத்திற்காக புது டெல்லியைச் சேர்ந்த எம்சன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.