Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சார்க் நாடுகளிடையே சுதந்திர வர்த்தகம்- சி.ஐ.ஐ யோசனை!

சார்க் நாடுகளிடையே சுதந்திர வர்த்தகம்- சி.ஐ.ஐ யோசனை!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (16:12 IST)
சார்க் நாடுகளிடையே அதிகமான பொருட்களை வர்த்தகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.

சார்க் நாடுகளிடையேயிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் படி, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி இறக்குமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் உளள பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளிடையே சுதந்திர வர்த்தகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பொருட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் செய்வதன் மூலமே சார்க் நாடுகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும்.

இந்த அமைப்பில் உள்ள நாடுகளிடையே வர்த்தகம், முதலீடு அதிகரிக்க வேண்டும். உள்கட்டைப்பு வசதிகளை இணைக்க வேண்டும். சுற்றுலா துறையை மேம்படுத்துவதுடன், பொதுமக்களிடையே நேரடியான உறவை அதிகரிக்க வேண்டும். விவசாயம், சிறு, நடுத்தர தொழில்கள் இடையே கூட்டுறவை உருவாக்க வேண்டும்.

இந்த நாடுகளிடையிலான முதலீட்டை அதிகரிக்க ஒவ்வொரு நாட்டிலும் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம், சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க வேண்டும். முதலீட்டை அதிகரிக்கும் விதத்தில் பிராந்திய முதலீட்டு கொள்கையை உருவாக்க வேண்டும். அதே போல் புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான தெற்காசிய நிதி ஏற்படுத்த வேண்டும்.

இந்த பிராந்தியத்தில் சரக்கு போக்குவரத்து, இதர சேவைகள், மக்கள் பிரயாணம் செய்வதற்கு ஏற்ற வகையில் தெற்காசிய பன்முனை தொடர்புகளை உருவாக்க வேண்டும்.

விவசாயம், சிறு நடுத்தர தொழில்கள் ஆகியவைகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க தெற்காசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் புற சேவை மையங்களை அமைக்க வேண்டும். இவை பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள நாடுகளின் விவசாயத்தை நவீனபடுத்த உதவியாக இருக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil