Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீஜிங் ஒலிம்பிக்- 200 கோடி டாலர் வருவா‌ய்!

பீஜிங் ஒலிம்பிக்- 200 கோடி டாலர் வருவா‌ய்!
, வியாழன், 31 ஜூலை 2008 (11:59 IST)
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டியால், பீஜிங் நகருக்கு 200 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என்று தெரிகிறது.

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி 29 வது ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இந்த விளையாட்டு போட்டிக்கான ஸ்பான்சர்சிப், உரிமம், விளம்பரம், அனுமதி சீட்டு விற்பனை, போட்டியை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமை போன்றவைகளால் 200 கோடி டாலர் வரை வருவாய் கிடைக்கும் என்று பீஜிங் ஒலிம்பிக் பொருளாதார ஆய்வு சங்கம் கணித்துள்ளது.

பீஜிங்கில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒலி‌ம்பிக் போட்டி குறிப்பிடத்தக்க அளவு உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பீஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக 2005 ஆண்டு முதல் 2008 வரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு துறைகளில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பீஜிங் நகரின் மொத்த உற்பத்தி 11.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது 2001-05 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 0.8 விழுக்காடு அதிகம் என்று பீஜிங் நகர புள்ளியல் துறை கூறியுள்ளது.

2007 ஆம் ஆண்டு பீஜிங்கின் நகரின் மொத்த உற்பத்தி 900 பில்லியன் யுவானாக அதிகரித்துள்ளது. (132 பில்லியன் டாலர்). இது அதற்கு முந்தைய ஆண்டை விட 12.3 விழுக்காடு அதிகம். இந்நகரின் உற்பத்தி வளர்ச்சி ஒலிம்பிக் போட்டியால் 1.14 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்காக பீஜீங் நகரில் புதிதாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், விளையாட்டு அரங்குகளை கட்டுவதால் மட்டும் இந்த வருடம் இந்நகரின் உற்பத்தி மதிப்பு 0.85 விழுக்காடு அதிகரிக்கும். இந்நகரில் 2004 ஆம் ஆண்டு முதல் 2008 வரை ஒலிம்பிக் போட்டிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் 105.5 பில்லியன் யுவான் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று புள்ளியியல் துறை கூறியுள்ளது.

இந்நகரில் 31 விளையாட்டு போட்டி அரங்குகள், 45 பயிற்சி அரங்குகள், மற்ற விளையாட்டு தொடர்பான வசதிகளை மேம்படுத்த 13 பில்லியன் யுவான் செலவழித்திருப்பதாக ஏற்கனவே பீஜிங் நகர அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

பீஜீங் விளையாட்டு பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லின் ஜியான் பெங் ஆய்வி நடத்தி, இந்த ஒலிம்பிக் போட்டியால் தேசிய அளவில் 600 பில்லியன் யுவான் அளவிற்கு பொருளாதார ரீதியாக பயன் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil