Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வியட்நாம் வர்த்தக பிரதிநிதிகள் குழு வருகை!

வியட்நாம் வர்த்தக பிரதிநிதிகள் குழு வருகை!
, புதன், 30 ஜூலை 2008 (15:52 IST)
வியட்நாம் நாட்டில் இருந்து வந்துள்ள 12 பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தகக் குழு, இந்திய தொழில் அதிபர்களை நேற்று மும்பையில் சந்தித்து பேசியது.

இந்திய தொழில் நிறுவனங்கள் வியட்நாமில் முதலீடு செய்வதற்கும், இரு நாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கும் வாய்ப்பு பற்றி கண்டறிய வியட்நாம் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது.

இவர்கள் நேற்று மும்பையில், இந்திய தொழில் துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள இந்தியன் மெர்ச்சன்ட் சேம்பரில் நடந்தது. இதில் பேசிய இந்தோ-வியட்நாம் தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் கமல் சேத் பேசுகையில், வியட்நாமில் தொழில் தொடங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்திய நிறுவனங்கள் வியட்நாமில் முதலீடு செய்ய இது சரியாண தருணம்.

இந்தியாவில் இருந்து வழக்கமாக உருக்கு, பருத்தி, மருந்துகள்,. இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வகை உலோகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வியட்நாமில் இருந்து காபி, ரப்பர், மின்னனு மற்றும் கனிணி வன்பொருள், இலவங்கம், பட்டை, மிளகு ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வியட்நாம் பிரதிநிதிகள் குழுத் தலைவர் பாம்-தா-டஜிங், வியட்நாமின் பொருளாதார நிலைமை பற்றி விளக்கி பேசுகையில், வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளாக 8 விழுக்காடாக இருந்தது. இந்த வருடம் 7 விழுக்காடாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியட்நாமின் மொத்த மக்கள் தொகை 8 கோடியே 40 லட்சம். இதில் பாதி பேர் 25 வயதுக்கும் கீழே உள்ளவர்கள். வியட்நாமில் இளம் வயதினர் பாதிக்கும் மேல் இருப்பதால், அபரிதமான சந்தை உள்ளது.

வியட்நாம் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டது. இப்போது பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தனி நபர் வருவாய் 840 டாலராக உள்ளது. வியட்நாமின் அந்நியச் செலவாணி இருப்பு 90 பில்லியன் டாலராக உள்ளது. அந்நிய நேரடி முதலீடு 18 பில்லியன் டாலராக இருக்கிறது.

இந்தியாவில் இருந்து வியட்நாமிற்கு ஏற்றுமதியாவது அதிகரித்து வருகிறது. தற்போது 1.3 பில்லியன் (1 பில்லியன் = நூறு கோடி) டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இது வியட்நாமின் மொத்த ஏற்றுமதி- இறக்குமதியில் 1 விழுக்காடுதான்.

வியட்நாமில் வங்கி, தகவல் தொழில் நுட்பம், மின் துறையில் அந்நிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் பயன்பாட்டிற்கு மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 1 கிலோ வாட்டுக்கு 5 சென்ட் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்குள் இரண்டு அணு மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil