தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை, அயல் அலுவல் பணி (ITES/BPO) ஆகிய துறைகளில் ஆரம்பத்திலேயே கால் பதித்த விஷால் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பங்குகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் டுடிஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் (அமெக்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ்) துணை நிறுவனமாகும்.
விஷால் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் ரூ.10 முகமதிப்புள்ள 27 லட்சத்து 90 ஆயிரம் பங்குகளை வெளியிடுகிறது. இவை புக் பில்டிங் முறையில் ஒதுக்கப்படும்.
இதில் 17,90,000 பங்குகள் புதிதாக வெளியிடப்படுபவை. மீதம் 10 லட்சம் பங்குகள் பங்குளை வைத்திருப்பவர்கள் விற்பனை செய்யும் பங்குகள். ரூ.10 முகமகதிப்புள்ள பங்கின் விலை ரூ.140 முதல் ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகளுக்கு வரும் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் தற்போது வெளியிடும் பங்கு மதிப்பு 26.12 விழுக்காடாகும். இந்த பங்களுக்கு கேர் ஆய்வு நிறுவனம் ஐ.பி.ஒ. கிரேட் 3 என்ற அந்தஸ்து கொடுத்துள்ளது. இந்த பங்கு தேசிய பங்கு சந்தை, மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
ஐ.டி.பி.ஐ. கேப்பிடல் மார்கெட் சர்வீசஸ் லிமிடெட் ரூ.10 முகமதிப்புள்ள 1 பங்கு ரூ.120 என்ற விலையில் 3 லட்சத்து 10 ஆயிரம் பங்குகளுக்காக ரூ.3.72 கோடி முதலீடு செய்கிறது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் முதலீடு, சென்னையில் உள்ள அலுவலகத்தை விரிவுபடுத்தவும், மும்பையில் தர நிர்ணயம், வர்த்தக அலுவலகத்தை அமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளும். இந்த விரிவு படுத்துதலில் டேட்டாவை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணியாளர் வசதிகளை 50இல் இருந்து 450 ஆக உயர்த்துதல், இ-பப்ளிஷிங் பணியாளர் வசதிகளை 50இல் இருந்து 250 ஆக அதிகரித்தல், டிஜிட்டல் நூலகம் பணியாளர் வசதிகளை 75இல் இருந்து 100 ஆக உயர்த்த பயன்படுத்தப்படும். அத்துடன் அமெரிக்கா, பிரிட்டனில் துணை நிறுவனங்களை அமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
இது தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது சென்னை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள அலுவலகத்தை வாங்கும் திட்டத்தில் உள்ளது.