Newsworld Finance News 0807 18 1080718053_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கச்சா எண்ணெய் விலை அறிவிப்பு!

Advertiesment
கச்சா எண்ணெய் விலை
தேசிய பல்பொருள் முன்பேர சந்தை ஜூலை மாதத்திற்கான கச்சா எண்ணெய் இறுதி விலையை அறிவித்துள்ளது.

நேஷனல் கமோடிட்டி அண்ட் டெரிவேட்டிவ் சந்தையில் ஜூலை மாதத்திற்கான ப்ரண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் ரூ.5,789, சுவீட் கச்சா எண்ணெய் விலை ரூ,5,989 என அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் பயன்படுத்தும் பர்னேஷ் ஆயில் (உலை எண்ணெய்) விலை 1 டன் ரூ.34 ஆயிரம் என அறிவித்துள்ளது.

இந்த முன்பேர சந்தையில் சுவீட் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ஜூலை 15ஆம் தேதியுடனும், ப்ரண்ட் ரக கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ஜூலை 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

உடனடியாக விற்பனை செய்யும் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் ரூ.5,575.57 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை 11.30 மணியளவில் ஆகஸ்ட் மாதத்திற்கான சுவீட் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் ரூ.5,619 ஆக இருந்தது.

இந்த முன்பேர சந்தை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil