உலக வர்த்தக வளர்ச்சி குறையாது என்று உலக வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
இது மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த ஆண்டு உலக அளவிலான வர்த்தக வளர்ச்சி 4.5 விழுக்காடு உயரும் என்று கணித்தது. கச்சா எண்ணெய், உணவு பொருட்கள், உலோகங்கள் போன்றவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் பல்வேறு நாடுகளில் பணவீக்கமும் உயர்ந்து கொண்டுள்ளது. பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி அல்லது பொருளாதார வளர்ச்சி பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த வருடம் உலக வர்த்தக வளர்ச்சி குறையும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பு வர்த்தக வளர்ச்சி முன்பு அறிவித்த அளவான 4.5 விழுக்காடு அளவே இருக்கும். இது குறையாது என்று அறிவித்துள்ளது.
இதன் பொருளாதார நிபுணர் மிகைல் பிஞ்சர் கூறுகையில், நாங்கள் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதை கவனத்தில் கொண்டுள்ளோம். இது வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே அதிக வேறுபாடு உள்ளது. நாங்கள் முன்பு வெளியிட்ட வர்த்தக வளர்ச்சி 4.5 விழுக்காடு என்ற முன்கணிப்பில் உறுதியாக இருக்கின்றோம் என்று கூறினார்.