Publish Date: Tue, 15 Jul 2008 (12:18 IST)
Updated Date: Tue, 15 Jul 2008 (12:17 IST)
கர்நாடாக மாநிலத்தின் மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்தும் பணியை ராம் இன்போமெடிக் நிறுவனம் செய்ய போகிறது.
இதற்காக மாநில அரசின் கியோனிக்ஸ் என்று அழைக்கப்படும் கர்நாடாகா எலக்ட்ரானிக் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது.
இதன் படி இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து கர்நாடாகாவில் புதிய மின்-ஆளுமை திட்டங்களை நிறைவேற்றும்.
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனமான ராம் இன்போமெடிக் மின்-ஆளுமை, வங்கிகளுக்கான மென் பொருள் வடிவமைப்பதில் முன்னணி நிறுவனமாகும்.