Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரம்பலூர் சி.பொ.ம. நிலம் கையகப்படுத்துதல் விரைவில் முடியும்!

பெரம்பலூர் சி.பொ.ம. நிலம் கையகப்படுத்துதல் விரைவில் முடியும்!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (13:39 IST)
பெரம்பலூரில் அமைக்கப்படும் பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இந்த மாதத்திற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரம்பலூர் அருகே தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமும், ஜி.வி.கே. இன்ஃப்ராடெக் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளன.

இதற்காக பெரம்பலூரில் 20 கி.மீட்டர் தூரத்தில் சென்னையை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வடக்கு பென்னாகோணம், தெற்கு பென்னாகோணம், திருமாந்துரை, பெரையூர், எரையூர் ஆகிய கிராமங்களைச் சுற்றிலும் 2,937 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தி, பத்திர பதிவு முடிந்து விட்டது.

இந்த நிலம் கையகப்படுத்தும் பணியில் ஆரம்ப கட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் நிலம் கொடுப்பதற்கு தயங்கினார்கள். அத்துடன் அதிக நஷ்டஈடு கேட்டனர். இவர்களுடன் மாவட்ட அதிகாரிகள் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியனார்கள். தற்போது இவர்களில் பெரும்பான்மையோர் நிலம் விற்பனை செய்ய சம்மதித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜவுளி ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தோல், இயந்திரம், மருந்து, மின் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள், உருக்கு, உரம், இராசயணம், பெட்ரோ-இராசயணம், அழகு மலர், தோட்ட விளை பொருட்கள், மின் இயல், தகவல் போக்குவரத்து போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு பொருளாத மண்டலத்திற்கு மத்திய வர்த்தக அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இங்கு அடுத்த ஏழு வருடங்களில் சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்படும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil