Publish Date: Mon, 07 Jul 2008 (13:52 IST)
Updated Date: Mon, 07 Jul 2008 (13:52 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா குறைந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 43.11/43.13 ஆக இருந்தது.
பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றமில்லை.
1 டாலர் 43.11/43.12 என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 4 பைசா அதிகம்.
வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 43.15/43.16.
பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தாலும், ஆசிய நாட்டுகளுக்கான சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது.
அத்துடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்தது. இதனால் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் காலையில் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும் போக்கு நிலவியது. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.