Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு 7 பைசா சரிவு!

டாலர் மதிப்பு 7 பைசா சரிவு!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (13:31 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 7 பைசா குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 43.25/43.26 ஆக இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு குறைந்தது.

1 டாலர் 43.22/43.23 என்று விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 7 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி நிலவரம் 43.29/43.31.

பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தாலும், ஆசிய நாட்டுகளுக்கான சந்தையில் 1 பீப்பாய் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 145.39 டாலராக அதிகரித்துள்ளது கவலை அளிக்க கூடிய விஷயம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil