Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவிற்கான வர்த்தக சலுகையை அமெரிக்கா நீக்கியது!

இந்தியாவிற்கான வர்த்தக சலுகையை அமெரிக்கா நீக்கியது!
, வியாழன், 3 ஜூலை 2008 (18:59 IST)
இந்தியா உட்பட 23 வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்க இறக்குமதி வரி விலக்கு அளித்து இருந்தது.

இந்த சலுகையை ரத்து செய்வதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் திங்கட்கிழமை அறிவித்தது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தங்க நெக்லஸ்களுக்கு முன்பு அமெரிக்காவில் வரி செலுத்த தேவையில்லை. இனி இதற்கு அமெரிக்கா இறக்குமதி வரி விதிக்கும். இதனால் இதன் விலைகள் உயரும்.

இந்தியாவில் இருந்து வருடத்திற்கு 266 மில்லியன் டாலர் மதிப்பிற்கு தங்க நெக்லஸ் ஏற்றமதி செய்யப்படுகின்றது. இதற்கு வரி விலக்கி அளிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க சந்தையில் மற்ற நாடுகளின் தங்க நகைகளுடன் போட்டியிட வேண்டியதிருக்கும். இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படும்.

அமெரிக்கா 1974 ஆம் ஆண்டு முன்னுரிமை வர்த்தக பட்டியலின் கீழ் இந்தியா உட்பட 132 நாடுகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி விலக்கு அளித்தது.

2007 ஆம் ஆண்டில் 30.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் வரி விலக்கு படி இறக்குமதி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா குறிப்பாக இந்தியா, பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு சலுகை ரத்து செய்திருக்கிறது.

இதற்கு காரணம் இந்த இரு நாடுகளும் தோஹாவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக இருப்பதே.

அமெரிக்க நலன்களுக்கு எதிராக இருக்கும் நாடுகளிலுக்கு இற்ககுமதி வரி சலுகை ரத்து செய்யும் தீர்மானம், 2006 ஆம் ஆண்டு டிசம்பரில் அதன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போது இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சூசன் ஸ்குவாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வர்த்தகத்தில் வளரும் நாடுகள் பங்கேற்பதற்காக, நாடாளுமன்றம் வர்த்தக முன்னுரிமை திட்டத்தை அமல்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சலுகை ரத்து படி இந்தியாவில் இருந்து 266 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தங்க நெக்லஸ், நகைகள், துருக்கியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 172 மில்லியன் மதிப்பிலான நகைகள், பிரேசிலில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 151 மில்லியன் மதிப்பிற்கான பெரினோபியம் என்ற தாது, அர்ஜென்டைனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 6.6 மில்லியன் மதிப்பிலான பாதாம் பருப்பு ஆகியவைகளுக்கு இறக்குமதி வரி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனிஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் இறக்குமதி வரி சலுகையை அமெரிக்கா ரத்து செய்யதுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil